சிங்காநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் கமலா குட்டை வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் மண் நிறைந்து அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளும் நிறைந்து கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் வழிந்ேதாட முடியாமல் தேங்கி கிடக்கிறது. அத்துடன் அதனருகில் சமூக விேரதிகள் அமர்ந்து இரவில் மது குடித்து வருவதால் அந்த வழியாக பெண்கள் பாதுகாப்பாக சென்று வர முடிவது இல்லை. எனவே அங்கு அமர்ந்து மது குடிப்பதை தடுக்கவும், கால்வாயை தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.