ஊட்டி நகராட்சியில் பல இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. குறிப்பாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலையில் தினமும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.