சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெருவில் திறந்த நிலையில் சாக்கடைகள் உள்ளது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. திறந்த நிலை சாக்கடையால் எதிர்பாராமல் சிறுவர், சிறுமிகள் விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடையை மூடி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.