நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து இந்து கல்லூரி செல்லும் சாலையின் வலதுபுறம் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட வழிவகை செய்ய வேண்டும்.
-சித்தார்த்தன், வடக்கு தாமரைகுளம்.