மதுரை மாநகராட்சி 23-வது வார்டு செல்லூர் கீழகைலாசபுரம் 2-வது தெருவில் சாலையில் கழிவுநீர் அடிக்கடி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அவ்வழியே செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தேங்கிய கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும்.