பாதாள சாக்கடை குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீர்

Update: 2025-03-23 13:36 GMT

தஞ்சை கல்லுக்குளம் பாத்திமா நகர் பாரதி தெருவில் பாதாள சாக்கடை குழி உள்ளது. இந்த பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வீடுகள் நிறைந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகளும் மூக்கை மூடியபடி அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்