பஸ் நிலையத்தில் தேங்கும் கழிவுநீர்

Update: 2025-03-23 13:35 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலைய வளாகத்துக்குள் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றி கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்