சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மாபட்டு நாவிதர் தெருவில் அடிக்கடி கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.