தூர்ந்துபோன கழிவுநீர் வாய்க்கால்

Update: 2025-03-23 12:37 GMT
வடலூர் அருகே கருங்குழி வடக்கு தெருவில் தொகுப்பு வீடுகள் உள்ள பகுதியில் கழிவுநீா் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் தூர்ந்துபோய் கிடப்பதால் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்