ஆபத்தான கழிவுநீர் கால்வாய் மூடி

Update: 2025-03-23 11:19 GMT

சென்னை வளசரவாக்கம், பிருந்தாவன் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்து உள்ளது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் அடிக்கடி தவறி விழும் சம்பவங்கள் நடக்கிறது. மேலும், மழை காலங்களில் பெரும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தை உணர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் உடனே புதிய கழிவுநீர் கால்வாய் மூடியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்