தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-03-23 09:57 GMT
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் புதுவேட்டக்குடி தெற்கு பகுதி பொதுமக்களுக்காக ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் போதிய இடவசதி இல்லை. மேலும் கடையின் முன்பு உள்ள வாய்க்காலில் கழிவுநீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்