உத்தமபாளையம் தாலுகா கோம்பை மேட்டு காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் சரிவர அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயைவிட்டு வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை முழுமையாக அமைக்க வேண்டும்.