புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் வடக்குத்தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் வீதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. மேலும் தெற்கு தெரு கடைவீதி உள்பட ஊரின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.