தஞ்சை பட்டுக்கோட்டை டவுன் அறந்தாங்கி முக்கம் பகுதியில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலின் ஒரு பகுதியில் இருந்த மூடி உடைந்து உள்ளது. தற்போது கழிவுநீர் வடிகால் திறந்த நிலையில் இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. திறந்த நிலையில் இருக்கும் வடிகாலில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வடிகாலுக்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.