சரவணம்பட்டி வி.ஐ.பி. சென்ட்ரல் டவுன் செல்லும் வழியில் சாலையோரத்தில் நீளவாக்கில் குழி ேதாண்டப்பட்டு உள்ளது. இந்த குழியில் கழிவுநீர் விடப்படுகிறது. நீண்ட நாட்களாக அங்கு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் ெகாசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.