அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜேம்ஸ் டவுன் மேட்டுவிளை சாலையில் சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் ஓடையின் கட்டுமானப்பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஓடையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மழைநீர் ஓடைப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்களா?.