நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட டி.வி.டி. காலனி 5-வது குறுக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் ஓடையில் குப்பைகள் கிடப்பதால் கழிவுநீர் வடிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால், அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பைகளை அகற்றுவதுடன், ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.