கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி

Update: 2025-02-23 16:39 GMT

கம்பத்தை அடுத்த கே.கே.பட்டி பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வழிந்தோட வழியில்லாமல் தெருவில் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சாக்கடை கால்வாய் பணியை விரைந்து தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்