கழிவுநீரை அகற்ற வேண்டும்

Update: 2025-02-23 14:40 GMT

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தொழிற்பேட்டை, மேனாம்பேடு சாலை எம்.ஜி.ஆர். சிலை அருகில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து கடந்த சில நாட்களாக கழிவுநீர் குழாய் உடைந்து சாலையில் வெளியேறுகிறது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. கழிவுநீரால் இந்த வழியை பயன்படுத்தாமல் பொதுமக்கள் தவிர்க்கின்றனர். எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்