காஞ்சீபுரம் மாவட்டம், ஆதனூர் ஊராட்சி, டி.டி.சி. நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாராமல் அப்படியே உள்ளது. இதன்காரணமாக, கழிவுநீர் செல்ல வழியின்றி கால்வாயிலேயே தேங்கிவிடுகிறது. இதனால் அந்த பகுதியில் அதிக அளவு துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.