கரூர் வாங்கப்பாளையம், தங்க நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிற்கிறது. இதனால் பல இடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.