தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஈத்தாமொழியில் கூட்டுறவு வங்கியின் அருகில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையில் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவு நீர் சாலையில் பாய்ந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையை தூர்வாரி கழிவுநீர் சாலையில் பாய்வதை தடுக்க வேண்டும்.