தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

Update: 2025-02-02 16:30 GMT

பழனி அடிவாரம் குரும்பபட்டி அரசமரத்து விநாயகர் கோவில் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த சில மாதங்களாக தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. மேலும் பிளாஸ்டிக் குப்பைகளும் குவிந்து கிடக்கின்றன. கழிவுநீர் வெளியேறாததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்