திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா குண்டூர் கிராமம் அய்யனார் நகர் 8-வது குறுக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலையோரம் முறையான வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலை ஓரத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.