சிதம்பரம் வீ.எஸ்.ஆர். நகர் பகுதியில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பணியை முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?