சென்னை தரமணி, எம்.ஜி.நகர் என்.எஸ்.கே. தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சில நாட்களாக இந்த பகுதியில் மெட்ரோ குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனை பயன்படுத்தும் மக்களுக்கும் உடல்நல குறைவு ஏற்படுகிறது. மேலும், குடிநீருக்கு மக்கள் அலைந்து திரியும் நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.