நாகர்கோவில் செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு செல்லும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைத்து பாதசாரிகளின் நடைபாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலாப்புகள் அகற்றப்பட்டு ஓடை சீரமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை சிமெண்டு சிலாப்புகள் அமைக்கப்படவில்லை. இதனால், குப்பைகள் காற்றில் பறந்து ஓடையில் விழுகிறது. மேலும், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதுடன் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாதசாரிகள் நடந்து செல்ல ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத்குமார், நாகர்கோவில்.