கரும்பாட்டூா் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டையடியில் இருந்து கரும்பாட்டூர் செல்லும் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் குப்பைகள் தேங்கி கழிவுநீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, ஓடையை முறையாக தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், தென்தாமரைக்குளம்.