துர்நாற்றம் வீசும் கழிவுநீர் வாய்க்கால்

Update: 2025-01-26 17:47 GMT

துர்நாற்றம் வீசும் கழிவுநீர் வாய்க்கால்அரியலூர் நகரில் உள்ள சடையப்பர் தெருவில் வீடுகள், கடைகள் உள்ளன. இந்த தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வாய்க்காலில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இதில் தெருநாய்கள் மற்றும் பன்றிகள் புரண்டு செல்வதால் எளிதில் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கழிவுநீர் வாய்க்காலை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.


மேலும் செய்திகள்