சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி கிராமம் மாசிலாமணி நகரில் கழிவுநீர் மற்றும் மழைநீர் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?