திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, மேல் அயனம்பாக்கம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் உள்ள இடத்தில் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அந்த பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி நகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.