கோவை மாநகராட்சி 33-வது வார்டுக்கு உட்பட்ட செந்தமிழ் நகரில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. மண், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் நிறைந்து கிடக்கிறது. கழிவுநீர் வழிந்தேட முடியாமல் ஆங்காங்யே தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை தூர்வாரி கழிவுநீர் சீராக வழிந்தோட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.