கோவை ராமநாதபுரம் சுங்கம் காமராஜ் நகர் 2-வது வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் தூர்வாரப்பட்டது. அப்போது கால்வாயில் இருந்த மண் உள்ளிட்ட கழிவுகளை அகற்றி அருகிலேயே குவித்து வைத்தனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அந்த கழிவுகளை அகற்றவில்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் வரிசையாக கழிவு குவியல் காணப்படுகிறது. அத்துடன் ஒருவித துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த கழிவு குவியல்களை உடனடியாக அகற்ற வேண்டும்.