திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, பருத்திபட்டு பகுதியில் ஒரு தனியார் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவு நீர் வெளியேறுவதை தடுத்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.