கடலூர் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகர் இரண்டாவது குறுக்கு தெருவில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதால் வெளியேறும் நீரானது பாதாள சாக்கடையுடன் கலந்து தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.