திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடி

Update: 2025-01-12 14:56 GMT

அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் எதிர்ப்புறம் உள்ள சாலையில், பாதாள சாக்கடைக்காக போடப்பட்டுள்ள மூடி முழுவதுமாக மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இந்த வழியாக ரெயில் நிலையத்திற்கு செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் இந்த குழிகளில் விழுவதற்கும், வாகனங்களை விடுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பகுதியானது இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாதாள சாக்கடை குழியை மூடுவதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்