சிவகங்கை மாவட்டம் பனங்குடி ஊராட்சி பி.நடராசாபுரம் சாலையில் பிளாஷ்டிக் கழிவுகள் அதிகளவு தேங்கி உள்ளது. அத்துடன் கழிவுநீரும் சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையில் குப்பைகள், கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?