விழுப்புரம் தெய்வ நகரில் சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடியில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு மலேரியா, காலரா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே நகராட்சி நிர்வாக அதிகாரிகள் விரைந்து பாதாள சாக்கடை மூடியை சாிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.