தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2025-01-05 11:39 GMT

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம் வெள்ளாளர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது ஆங்காங்கே சிதிலமடைந்த நிலையில் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்பதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்