கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-01-05 11:22 GMT

கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு ஏ.டி. காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்