ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட ராஜிவ்காந்தி நகரில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருக்களில் செல்வதால் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் கொசு அதிக அளவில் உற்பத்தியாகி அடிக்கடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சல் ஏற்படுத்துகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.