புதுச்சேரி எல்லைப்பிள்ளை சாவடியில் இருந்து வில்லியனூர் மெயின் ரோட்டுக்கு திரும்பும் வளைவில் கழிவுநீர் வாய்க்காலில் தடுப்பு கட்டை இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள அந்த கழிவுநீர் வாய்க்காலை சுற்றி தடுப்பு கட்டை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.