தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-12-29 11:30 GMT
திருமானூர் ஒன்றியம், க.பரதூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெரு மேற்கு புறம் சிமெண்டு சாலையில் இருபுறமும் வடிகால் வசதி உள்ளது.அதில் தென்புறம் உள்ள வடிகாலில் கழிவு நீரானது தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர் நாற்றம் வீசி வருகிறது. மேலும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள், குழந்தைகள் நடந்து செல்லவே முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக் கவேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்