கோவை திருச்சி ரோடு சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே தரைமட்ட பாலம் உள்ளது. இதன் கீழ் சாக்கடை கால்வாய் ஓடுகிறது. அதில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு கழிவுநீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. அத்துடன் மழைக்காலங்களில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீருடன் கழிவுநீர் கலந்து அருகில் உள்ள பகுதிகளில் புகுந்து வருகிறது. எனவே அங்கு கொட்டப்பட்டு உள்ள குப்ைபகளை அகற்ற வேண்டும்.