கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகர் சிவா கார்டனில் நீண்ட நாட்களாக சாக்கடை கால்வாய் மூடப்படாமல் உள்ளது. மேலும் சாக்கடையை சுத்தம் செய்தபோது அகற்றிய கழிவு மண்ணை வீடுகளுக்கு அருகிலேயே போட்டு வைத்திருக்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. அத்துடன் கொசு தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே கழிவு மண்ணை உடனடியாக அகற்றி சாக்கடைக்கு மூடி போட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.