கரவிளாகம் வாணியக்குடிவிளை பகுதியில் கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாய் தண்ணீரை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த பகுதியில் உள்ள மாட்டு தொழுவ கழிவுநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் பாய்ந்து பொதுமக்கள் பயன்படுத்தும் கால்வாயில் கலக்கிறது. இதனால், தண்ணீர் மாசடைந்து காணப்படுதுடன், துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.