நாகர்கோவில் மாநகராட்சியின் மையப்பகுதியான வாட்டர் டேங்க் ரோடு அருகில் வேதானந்தா தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையை முறையாக பராமரிக்காததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் சாலையில் பாய்வதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.