விக்கிரவாண்டி அடுத்த வீராமூர் ஊராட்சி வி.புதுப்பாளையத்தில் விழுப்புரம்- திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீரானது அங்கு தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் நிலை உருவாகியுள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.