விழுப்புரம் அடுத்த மகாராஜபுரம் த.வீ.வ. வாரியம் குடியிருப்பு தெருவில் உள்ள பாதாள சாக்கடை மூடியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.