மதுரை அனுப்பானடி பஸ் நிறுத்தம் அருகில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பாதையை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?